காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நித்ய அன்னதானம் திட்டம் மீண்டும் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நாளை 14.4.22 தமிழ் புத்தாண்டு முதல் பகல் 11.30 மணிக்கு நித்ய அன்னதானம் நாள் தோறும் வழங்கப்படும். நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டம் மீண்டும் நாளை முதல் நடைமுறை படுத்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாணை பிறப்பித்துள்ளனர். பக்தர்கள் அன்னப்பிரசாதம் அருந்தி அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.